2025 மே 13, செவ்வாய்க்கிழமை

நல்லிணக்கத்துக்காக விசேட துஆப் பிரார்த்தனை

Editorial   / 2019 மே 19 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

 

நாட்டில் நிரந்தர அமைதி ஏற்படவும் ஐக்கியமும் சமாதானமும் நல்லிணக்கம் ஏற்படவும் வேண்டி, காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி ஜாமியுல்லாபிரீன் பெரிய மீரா ஜும் ஆப்பள்ளிவாயலில், விசேட துஆப் பிராத்தனை, நேற்று  (18) இடம்பெற்றது.

 

காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிராத்தனை நிகழ்வில், காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும் முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலின் இமாமுமான மௌலவி ஏ.ஜி.எம்.அமீன் விஷேட பிராத்தனை நடத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை, காத்தான்குடி முஸ்லிம் மக்கள் வன்மையாகக் கண்டிப்பதுடன் மிகவும் மிலேச்சனத்தனமான கொடூரமான இந்தச் செயலை தாம்  காத்தான்குடி முஸ்லிம்களாகிய தாம் கண்டிப்பதாகவும் தெரிவித்தனர்.

அனைத்தச் சந்தர்ப்பங்களிலும் பொறுமையுடனும் அமைதியாகவும் நடந்து கொள்ளுமாறும் நாட்டில் நிரந்தர அமைதியும் சமாதானமும், சகோதரத்துவமும், நல்லிணக்கமும் ஏற்பட, தனித்தனியாகவும் கூட்டாகவும் பிராத்தனையில் ஈடுபடுமாறும்  மௌலவி எம்.ஏ.ஹாலித் ஹசன் இதன்போது அறிவுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X