Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
கனகராசா சரவணன் / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க, ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டுமென, தொண்டர் ஆசிரியர்களின் சங்கத் தலைவர் ரி.கரிஸ்வரன் வேண்டுகோள் விடுத்தார்.
கிழக்குத் தொண்டர் ஆசிரியர்களின் சங்கத்தின் போராட்டத்தின் ஓர் அங்கமாக எதிர்வரும் 28ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து நியமனம் தொடர்பாக அழுத்தம் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்படி சங்கம் மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், தமது செயற்பாடுகளுக்கு உரமூட்டும் வகையில் இச்செயற்பாட்டை துரிதப்படுத்துவதற்கு கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாட கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்த்து நிற்பதாகவும் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago