Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
இரண்டு வருடங்களினுள் புதியதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக புதிய அரசாங்கத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நடவடிக்கை, அங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தற்போது இந்த நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய பிரதான கட்சிகள் ஒன்றுசேர்;ந்து புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கியுள்ளது' என்றார்.
'மேலும் எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்ற வேறுபாடில்லாமல் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டைக் கட்டியெழுப்பி நாட்டிலுள்ள பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வைக் காண வேண்டும்.
'குறிப்பாக, யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகணங்களை கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளார். இதற்காக ஜனாதிபதிக்கும் இந்த அரசாங்கத்துக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த அரசாங்கத்தை நேரான பாதையில் கொண்டுசென்று, எமது மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்;த்த வேண்டுமென்ற புதிய வேலைத்திட்டத்திலான நகல் திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார். எதிர்வரும் வருடங்களில் எங்களுடைய பிரதேசங்களில் மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்களை இனங்கண்டு இரண்டு வருடங்களினுள் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்' எனவும் அவர் தெரிவித்தார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025