Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா
தங்களுக்கு அரசாங்க நியமனங்களை வழங்குமாறு கோரி கடந்த 21ஆம் திகதி முதல் காலவரையறையற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள், நேற்று (28) பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியில்; ஈடுபட்டனர்.
காந்தி பூங்காவுக்கு முன்பாக ஆரம்பமாகி மட்டக்களப்பு நகரைச் சுற்றிவந்து மீண்டும் அப்பூங்காவைச் சென்றடைந்த இந்த ஆர்ப்பாட்டப் பேரணிக்கு இலங்கை ஒன்றினைந்த பட்டதாரிகள் சங்கம்; ஆதரவு வழங்கியது.
சவப்பெட்டியை சுமர்ந்தவாறு பேரணியில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கையில், 'பொய்யான வாக்குறுதிகளால் நாம் ஏமாற்றப்பட்டு வருகின்றோம். எமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்கும்வரை எமது சத்தியாக்கிரகப் பேராட்டம் தொடரும்' எனத் தெரிவித்தனர்.


1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago