2025 மே 07, புதன்கிழமை

பட்டிருப்பில் செயலமர்வு

Niroshini   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வடிவேல் சக்திவேல்   

ஊட்டல் பிரதேச பாடசாலை தொடர்பான விடயங்களை எதிர்வரும் கல்வியாண்டில் பாடசாலைகளில் நடைமுறைப் படுத்துவது தொடர்பாக அதிபர்களையும் ஆசிரியர்களையும் தெளிவுபடுத்தும் செயலமர்வு நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு,பட்டிருப்பு வலயக் கல்வி பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

முறைசாராக் கல்விக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புஸ்பராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பட்டிருப்பு கல்வி வலய கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஞானராஜா,  களுவாஞ்சிகுடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.திரவியராஜ், ஆசிரிய ஆலோசகர் எஸ்.இராசலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பாடசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்ற ஊட்டல் பிரதேசம் தொடர்பான விளக்கங்கள், இடை விலகல் மாணவர்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள், மாணவர்களின் குடும்பப் பரம்பல், பிரதேசத்தினை படவரைவு மூலமாகக் காட்டல் மற்றும் பாடசாலை ஊட்டல் பிரதேசம் தொடர்பாக 2016ஆம் கல்வி ஆண்டில் நடைமுறைப் படுத்தப்படவுள்ள விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X