2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

படகு கவிழ்ந்ததில் இரு மீனவர்கள் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 25 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.ஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு முகத்துவாரம் கடலில் மீன்பிடியில் ஈட்டிருந்த மீனவர்களின் படகு ஒன்று செவ்வாய்க்கிழமை (24) இரவு கவிழ்ந்ததில் மீனவர்கள் இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

திராய்மடு 8ஆம் குறுக்கைச் சேர்ந்த சகோதர்களான துரைமணி வசந்தன் (வயது 26), துரைமணி செல்வா (வயது 18) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இப்படகில் சென்ற நாவலடிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஏனைய மீனவர்களால் காப்பாற்றப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X