Editorial / 2021 டிசெம்பர் 30 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி கடலில் இன்று (30) காலை மீன்பிடிக்கச் சென்ற சிறிய மீன்பிடிப் படகு ஒன்று கடலில் மூழ்கிய போதும் அதில் சென்ற இரு மீனவர்களும் உயிர் தப்பிய நிலையில் கரையை அடைந்துள்ளனர்.
புதிய காத்தான்குடியைச் சேர்ந்த இரு மீனவர்களே படகு கடலில் மூழ்கி போதும் உயிர்தப்பியுள்ளனர்.
வழமைபோன்று, இன்று காலை 6 மணிக்கு காத்தான்குடி, ஏத்துக்கால் கடலுக்கு இரு மீனவர்களும் சிறிய மின்பிடி படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
சிறிது தூரம் சென்றதும், கடலில் சுழல் காற்று திடீரென வீசியதால், அந்த மீன்பிடிப் படகு கவிழ்ந்துள்ளது. அதில் சென்ற இரு மீனவர்களும், கடலில் மூழ்கிய நிலையில் படகில் தொங்கிக் கொண்டிருந்துள்ளனர்.
இதனைக் கண்ட கரையில் நின்ற மீனவர்கள், உடனடியாக விரைந்து மீன்பிடிப் படகொன்றில் கடலுக்குச் சென்று குறித்த இரு மீனவர்களையும் காப்பாற்றிக் கொண்டு, கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
கடலில் மூழ்கிய சிறிய மீன்பிடிப் படகையும் எடுப்பதற்காக முயறச்சிகளை மேற்கொண்டுவருவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago