2025 மே 13, செவ்வாய்க்கிழமை

படைப்புழுவால் பாதிப்பு; 95 விவசாயிகளுக்கு இழப்பீடு

Editorial   / 2019 மே 20 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹுஸைன்

 

மட்டக்களப்பு, மண்டபத்தடி விவசாய விரிவாக்கல் பிரிவில், படைப்புழுவின் தாக்கத்தால் சோளம் செய்கை முழுமையாக  பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு, விவசாயத் திணைக்களத்தால்,  நேற்று முன்தினம் நட்டஈடு வழங்கி வைக்கப்பட்டது.

மண்டபத்தடி விவசாய விரிவாக்கல் பிரிவைச் சேர்ந்த 95 விவசாயிகளுக்கு முதற்கட்டமாக 18 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கான காசோலைகள்  வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே. சிவநாதன், கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் என். ஜெகன்நாத், மட்டக்களப்பு மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர்  வீ. பேரின்பராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X