2025 மே 10, சனிக்கிழமை

‘பணிப்பாளர் நியமனத்தில் அவதானங்கள் தேவை’

Editorial   / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்

கிழக்கு மாகாணத்திலோ அல்லது மட்டக்களப்பிலோ நிரந்தரமான வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதானால் அதில் அதிக அவதானம் தேவையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

பொது நியமங்களை அடிப்படையாக வைத்து இதற்கான நேர்முகப்பரீட்சை நடத்தப்படுவதுடன், அந்த நேர்முகப் பரீட்சையில், வர்த்தமானியில் கூறியவாறு  பொது ஆளணியினருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள தனது அலுவலகத்தில், ஆசிரியர்களுடன் இன்று (18) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரைத் தெரிவுசெய்வதாக இருந்தால், நிச்சயமாக இலங்கை கல்வி நிர்வாக சேவை என்கின்ற விடயம் முக்கியமாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.

இலங்கை கல்வி நிர்வாக சேவையில், பொது ஆளணி, விசேட ஆளணி என இரு வகையான ஆளணிகள் காணப்படுகின்றார்கள் எனவும் வலயக் கல்விப் பணிப்பாளராகத் தெரிவுசெய்யப்படுகின்றவர் நிச்சையமாக பொது ஆளணி 1ஆம் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறு 1ஆம் வகுப்பைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்காதவிடத்து, இலங்கை கல்வி நிர்வாக சேவை 2ஆம் வகுப்பிலுள்ள பொது ஆளணியினரைத் தெரிவுசெய்ய வேண்டும். அவ்வாறனவர்களும் விண்ணப்பிக்காதவிடத்தே இலங்கை கல்வி நிர்வாக சேவை 3ஆம் வகுப்பினரைத் தெரிவு செய்யவேண்டிய தேவை இருப்பதாக, 2015ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்விடயத்தில் 2017ஆம் ஆண்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள ஓரிரு அதிகாரிகள் தவறு செய்துள்ளார்கள் என்றும் இந்தத் தவறு மீண்டும் ஏற்படாதவண்ணம் கிழக்கு மாகாண அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X