2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘பயங்கர மனோநிலையையும் ஒழிக்கவேண்டும்’

Editorial   / 2019 மே 22 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.எஸ்.எம். ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்

நாட்டில் பயங்கரவாதச் செயற்பாடுகளை முற்றாக இல்லாதொழிப்பதோடு, பயங்கரவாத மனோநிலையை உருவாக்கும் காரணிகளையும் ஒழிக்க, அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென, நல்லாட்சிக்கானத் தேசிய முன்னணியின் தவிசாளர் சிராஜ் மசூர் தெரிவித்தார்.  

இது தொடர்பாக, அவர் நேற்று (22) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,  

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இனவாதத்தைத் தூண்டி, அப்பாவி மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து, அழிவுகளை மேற்கொள்ளும் நாசகாரச் சக்திகளை, முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் உயிர்த்த ஞாயிறன்று படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களின் குடும்பத்தினருக்கும் பாதிக்கப்பட்ட தேவாலயங்கள், ஏனைய சொத்துகளுக்கும் நியாயமான இழப்பீடுகளை, அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

குருநாகல், புத்தளம், கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கெதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கலவரங்களில் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களது பள்ளிவாசல்களுக்கும், பொது நிறுவனங்களுக்கும், வீடுகளுக்கும், சொத்திழப்புகளுக்கும் அரசாங்கம் நியாயமான இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.  

இதேவேளை, சந்தேகத்துக்கிடமான வகையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவிகள், உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் வெளிநாட்டு சக்திகளின் அநாவசியமானத் தலையீடுகள் கட்டுப்படுத்தப்பட்டு, நாட்டின் இறையாண்மையும் சுயாதீனமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X