Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை தரவைக் கோவில் வீதி எனும் பெயரை கடற்கரைப் பள்ளி வீதி எனும் பெயராக மாற்றும் பிரேரணை கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டிருப்பதால், பழைய பெயர் செல்லுபடியற்றதாகி விட்டது என்று, கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று முன்தினம் (15) மாலை மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மேற்படி சர்ச்சைக்குரிய வீதியின் பெயர் தொடர்பில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போதே மேயர் றகீப் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நம்மில் பெரும்பாலானோர் தத்தம் அரசியலுக்காக சமூக விவகாரங்கள் தொடர்பில் உரத்துக்கு கோஷம் எழுப்புகின்றோம். இவ்வாறான பேச்சுக்கள் இன ஒற்றுமைக்கு ஊறுவிளைவிப்பதை எவரும் கருத்தில் கொள்வதில்லை. அவ்வாறே இந்த வீதியின் பெயர் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
“உண்மையில் ஒரு காலத்தில் இந்த வீதிக்கு தரவைக் கோவில் வீதி எனும் பெயரை சூட்டுகின்றபோது, அவ்வீதியில் வசிக்கின்ற மக்களின் விருப்பம் அறியப்படாமல், அவர்களுக்குத் தெரியாமல், உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாமல் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago