Editorial / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை மேலும் விரிவாக்கும் வகையில் அடுத்த ஆண்டிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில், பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் வைத்தியர் அதிகாரி அனுஷியா ஸ்ரீசங்கர் தெரிவித்தார்.
எறாவூரில் நேற்று (18) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஆட்கொல்லி நேயான எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு சமுதாயத்தின் அடிமட்டத்திலுள்ளவர்களுக்கும் தெளிவாகக் கிடைக்கும் வண்ணம் நாம் விழிப்பூட்டலைச் செய்து வருகின்றோம்.
அந்த வகையில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் இதனை முன்னெடுத்தால் அவர்களது குடும்பத்திற்கு அது சென்றடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதாலே அடுத்த வருடம் இதனை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளளோம் என்றார்.
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago