Editorial / 2022 ஜனவரி 18 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியான பைசர் ஏற்றும் நடவடிக்கையின் கீழ், மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு இன்று (18) ஏற்றப்பட்டுள்ளதாக மட்டு. வெட்டுக்காடு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் த.மிதுனன் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய, நாடளாவிய ரீதியில் 12 தொடக்கம் 15 வயது வரையிலான பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை, மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஏனைய பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு தொடர்ச்சியாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெறும் எனவும் மாணவர்கள் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் ஆர்வமாக ஈடுபட்டுவருவதாக சுகாதாரப் பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026