2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்

Editorial   / 2019 மே 22 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

 

மட்டக்களப்பு மாவட்டத்தில், உயிர்த்த ஞாயிறுத் தினத்தன்று மேற்கொள்ளப்பட்டத் தாக்குதலையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டங்களை, பொலிஸார் முன்னெடுத்து வரும் நிலையில், கிராம மக்களின் பாதுகாப்பையும் கிராமங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களையும் தடுப்பதற்கானக் கிராம பொதுமக்களுடனான கலந்துரையாடல், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி கிராமத்தில், நேற்று (21) மாலை இடம்பெற்றது.  

இதன்போது, கிராமப்பகுதிக்குள் சந்தேகத்துக்கிடமான முறையில், யாரேனும் நடமாடுவதைக் கண்டால், உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் பொதுமக்கள், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, தத்தமது குடும்பங்களையும் தங்களையும் பாதுகாத்துக்கொள்வதற்கான விழிப்புணர்வும் இதன்போது வழங்கப்பட்டது.  

இந்நிகழ்வில், மட்டக்களப்பு கூழாவடி
173ஐ , கூழாவடி 173 எஃப், மாமாங்கம் கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X