2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பீதியிலிருந்து மீளுமாறு அறிவுறுத்து

Editorial   / 2019 மே 19 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

அச்ச உணர்வைத் தவிர்த்து வழமை போன்று அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு, காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த அறிவித்தல், காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல்களின் ஒலி பெருக்கியில் இன்று (19) விடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில், வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக, காத்தான்குடி பொது மக்கள் அச்ச உணர்வை தவிர்த்து வழமை போன்று அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அன்புடன் வேண்டிக்கொள்வதாகத் அவர் தெரிவித்தார்.

மேலும் வர்த்தகர்கள் வழமை போன்று பகல், இரவு வேளைகளில் வர்த்தக நிலையங்களை திறந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும், அதேபோன்று பள்ளிவாயல்கள் றமலான் கால இரவு நேர வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கலந்துரையாடலில், காத்தான்குடி நகர சபையின் தவிசாளர், கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மட்டக்களப்பு மாவட்ட இராணுவ மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதி நிதிகள், காத்தான்குடி உலமா சபை பிரதி நிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர் என்றும், பல்வேறுத் தீர்மானங்கள் எட்டப்பட்டதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X