ஆர்.ஜெயஸ்ரீராம் / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - கிரான் பிரதேசத்தில், சட்டவிரோத புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 07 சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளதுடன், அதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கண்டி, அல்கடுவ, ஹோமாகம, கோரகல்லி, மடு, கிரான் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று (10) இரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, கிரான், பூலாக்காடு பிரதேசத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, புதையல் தோண்டப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், பூசைப் பொருள்கள், மோட்டார் சைக்கிள்கள் 4 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சந்தேகநபர்களை, கைப்பற்றப்பட்ட பொருள்களுடன் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago