2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

புனர்வாழ்வு பெற்றவர்களுக்கான சுயதொழில் நிதிக்கடன்கள்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் தொழில் விருத்தியை நோக்காகக் கொண்டு புனர்வாழ்வு அதிகாரசபையினால் கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்று புனர்வாழ்வு அதிகாரசபை தெரிவிக்கின்றது.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் இக் கடன் திட்டல் சிறந்த திட்டங்களுக்கும், செயற்பாட்டிலுள்ள தொழில் முயற்சிகளுக்கும் கடன்கள் வழங்கப்படுகின்றன.

புனர்வாழ்வு பெற்றவர்களுக்கான சுயதொழில் நிதிக்கடன்கள் தொடர்பான விண்ணப்பங்களுக்கும் தொடர்புகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத் திட்டமிடல் செயலகத்தினைத் தொடர்பு கொள்ளவும்.

2013ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டாலும் 2015ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்ட புனர்வாழ்வு பெற்றவர்களுக்கான கடன் திட்டம் மீண்டும் 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2017ஆண்டில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு விண்ணப்பித்த 138 பேரில்,  கருத்தரங்குகள் நடத்தப்பட்டு, சிறந்த  திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு 63 பேர் இவவருடத்தின் ஒக்ரோபர் மாதம் வரையில் கடன்களைப் பெற்றிருந்தனர். 75பேர் கடன்களைப் பெறவுள்ளனர்.

2013ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை இந்தக் கடன் திட்டத்தின் கீழ் 74பேர் கடன் பெற்றிருந்தனர். இவ்வருடத்தில் 150 பேருக்கு கடன்களை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X