பேரின்பராஜா சபேஷ் / 2018 ஜூலை 22 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாண சபை, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் பெண்கள் பங்குபற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பாக, கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நடத்தப்பட்ட கலந்துரையாடல், மட்டக்களப்பு சத்துருக் கொண்டான் எஸ்கோ கேட்போர் கூடத்தில் நேற்று (21) நடைபெற்றது
சட்டம், சமூக நம்பிக்கையகம், இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த இக்கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், சட்டம், சமூக நம்பிக்கையகத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.எம்.சேனாரத்ன, சட்டத்தரணி ஸம்ருத் ஜஹாஸ் ஆகியோர் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.
இதன்போது, மாகாண சபைத் தேர்தலில் 25 சதவீதம் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமா, பெண் பிரதிநிதித்துவத்தின் சாதக, பாதகங்கள், உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் 25 சதவீதமாக உள்வாங்கப்பட்டார்களா, என்பது தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டு, ஆலோசனைகளும் பெறப்பட்டன.
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கிழக்கு மாகாணத்தில் கட்சிகளால் வட்டார ரீதியாகப் பெண்களுக்கு சரியான இடங்கள் வழங்கப்படாமை தொடர்பாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
பெண்கள் எதிர்காலத்தில் தமது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், தமது பிரச்சினைகள் தொடர்பாக குரல் கொடுக்கவும் மாகாண சபையில் 25 சதவீதமாக பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவேண்டுமென, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.
29 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
4 hours ago
4 hours ago