Freelancer / 2022 ஜூலை 31 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி மொறக்கொட்டாஞ்சேனை விஷ்ணு ஆலயத்துக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியால் நடந்து சென்ற இளைஞர் ஒருவரை மோதியதில் சம்பவ இடத்திலே இளைஞர் உயிரிழந்த சம்பவம் நேற்று (30) இரவு 11 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
சம்பவதினமான நேற்று மாவடிவேம்பு 2 ஆம் பிரிவைச்சேர்ந்த 27 வயதுடைய வேணுகோபலன் என்பவர் இரவு 11 மணிக்கு வீதியால் நடந்து வந்து கொண்டிருந்த போது மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனை நோக்கி பிரயாணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று மோதியதில் இளைஞன் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சடலத்தை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன், பேருந்து சாரதியை கைதுசெய்துள்ளனர்.
மேலும் கைது செய்த சாரதியை நீதிமன்றில் ஆஜர்படுத்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

2 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago