Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
பேரின்பராஜா சபேஷ் / 2018 ஓகஸ்ட் 26 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கூட்டு எனும் முயற்சியிலே ஈடுபட்டு, அதில் களமும் கண்டவர்கள் தாங்கள் என, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் அண்மையில் மட்டக்களப்பில் ஓரிடத்தில் சந்தித்துக் கலந்துரையாடியமை தொடர்பில், நேற்று (25) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், "கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் நாங்கள் அங்கு கலந்து கொண்டோம். அங்கு பொதுச் சின்னம் தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை" என்று அவர் கூறினார்.
எல்லாத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முகங்கொள்வதன் மூலம், தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் இருப்பதற்குரிய வழிவகைளை காணமுடியும் என்றும், அதன் மூலம் அதியுச்ச தமிழ்ப் பிரதிநிதிகளைப் பெறமுடியும் என்றும் கருத்துகள் அங்கு பரிமாறப்பட்டன என, அவர் தெரிவித்தார்.
இதற்கான பொது வேலைத்திட்டம் ஒன்றை அமைத்துக் கொண்டு, தொடர்ந்து இதற்காக வேலை செய்ய வேண்டுமென்றும், இதற்காக தாங்கள் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்திருப்பதாகவும், அவர் கூறினார்.
இதனடிப்படையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை வரைவதாகவும், அந்த ஒப்பந்தம், எல்லாக் கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கின்றது என்று தெரிவித்த அவர், அவ்வாறு, புரிந்துணர்வு உடன்படிக்கை அனுப்பி வைக்கப்படுகின்ற போது தமது கட்சி மட்டத்திலே அதனைப் பரிசீலனை செய்து, தமது அபிப்பிராயங்களைத் தெரிவிக்கவுள்ளதாக மேலும் கூறினார்.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago