Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 ஜனவரி 03 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
பொலிஸ் உத்தியோகத்தர்களின் மொழி அறிவை மேம்மபடுத்தும் நோக்கில், சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழிப் பயிற்சியும் தமிழ் பொலிஸ் உத்யோகத்தர்களுக்கு சிங்கள மொழிப் பயிற்சியும் வழங்கும் நடவடிக்கைகள், மட்டக்களப்பில் நேற்று (02) ஆரம்பமாகின.
மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் கல்லூரியின் பொறுப்பதிகாரி எஸ்.ரவிசசந்திரன் தலைமையில் இடம்பெற்ற பயிற்சிக்கான பொலிஸ உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளும் வைபவத்தில் பொலிஸ் பயற்சிக் கல்லூரி உதவிப் பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.அப்துர் றஹீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
ஆறு மாதங்களைக் கொண்ட இப்பயிற்சி நெறிகளில், நாடளாவிய ரீதியில் கடமை புரியும் 250 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுள் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்குகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
12 May 2025