2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

போலியான கடிததலைப்பு, கையொப்பத்துடன் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது

வா.கிருஸ்ணா   / 2018 ஜூலை 26 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளரின் போலியான கடிததலைப்பு மற்றும் கையொப்பத்துடன் சட்ட விரோதமான முறையில் நடாத்தப்பட்ட மரக்கடத்தல் முறியடிக்கப்பட்டதாகவும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் பொலிஸார் அறிவுத்தியுள்ளனர்.

ஏறாவூர்ப்பற்று, பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் இன்று (26) காலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான கடற்தொழில் நீரியல்வள,கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தலைமையில் இந்த அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, கரடியானாறு பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் ரி.வரதன் கருத்து தெரிவிக்கையில்,கடந்த அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சட்ட விரோத மண் கடத்தல் மற்றும் மரக்கடத்தல்கள் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கையெடுக்கவில்லையென்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், கடந்த முதலாம் திகதியில் இருந்து 25ஆம் திகதி வரையில் 23 சட்ட விரோத மணல் கடத்தல்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

அத்துடன், மரம் கடத்தல் தொடர்பில், இரண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்று ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளரின் ஒப்பம்,முத்திரை,கடித தலைப்பிணைக்கொண்டும் பிரதேச கிராம சேவையாளரின் கையொப்பம் மற்றும் போலிமுத்திரையினையும் இட்டு போலியான மரம்கொண்டுசெல்லும் விண்ணப்பத்தினை தயாரித்து மரக்கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த மரம்கொண்டுசெல்வதற்கான விண்ணப்பம் பிரதேச செயலகத்தில் வழங்கப்படுகின்றது. அது சிங்கள மொழியில்தான் வழங்கப்படுகின்றது. எனினும் கைப்பற்றப்பட்ட அந்த விண்ணப்பப்ப படிவத்தில் சிங்கள வசனத்தில் இருந்த பல பிழைகளே அது போலியானது என இனங்காட்டியது. அதன் காரணமாகவே குறித்த மரக்கடத்தல் பிடிக்கப்பட்டது.

இது தொடர்பில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோதே பிரதேச செயலாளரோ கிராம சேவையாளரோ எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X