2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மான், மரை இறைச்சியுடன் நால்வர் கைது

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், வடிவேல் சக்திவேல்,எம்.எஸ்.எம்.ஹனீபா

பொதி செய்யப்பட்டும் பொதி செய்வதற்கு தயாரான நிலையிலும் குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த  சுமார் 175 கிலோகிராம் மான் மற்றும் மரை இறைச்சியை ஏறாவூரில் சனிக்கிழமை (03) இரவு கைப்பற்றியதுடன், 04 சந்தேக நபர்களை கைதுசெய்ததாகவும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள சுற்றுவட்ட அதிகாரி என்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.

தங்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து ஏறாவூர் தெற்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டடத்தொகுதியைச் சுற்றிவளைத்தபோது, மான் இறைச்சியை வெட்டி துப்புரவு செய்து பொதியிட்டுக்கொண்டிருந்த சந்தேக நபர்களையே கைதுசெய்ததாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் எல்லையிலுள்ள தொப்பிகல (குடும்பிமலை) மலைப்பகுதிக் காடுகளிலிருந்து இறைச்சிக்காக இந்த மான்களும் மரைகளும்  வேட்டையாடப்பட்டதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X