Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் காட்டு யானைகளின் ஊடுறுவலை கட்டுப்படுத்த மின் வேலிகளை அமைப்பதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு,பட்டிருப்பு தொகுதிக்குட்பட்ட பல கிராமங்களில் காட்டு யானைகளின் ஊடுறுவல் அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வன ஜீவராசிகளுக்கு பொறுப்பான அமைச்சர் ஜெயவிக்கிரம பெரேராவுக்கும் முன்னாள் பிரதியைமச்சர் எஸ்.கணேசமூர்த்திக்குமிடையில் திங்கட்கிழமை(05) மாலை சந்திப்பொன்று அமைச்சில் நடைபெற்றது.
இதன்போதே, காட்டுயானைகள் கிராமங்களுக்குள் ஊடுறுவதை கட்டுப்படுத்த மின் வேலிகளை அமைப்பதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் பிரதியைமச்சர் எஸ்.கணேசமூர்த்தி நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இச்சந்திப்பின் போது,மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு, படுவான்கரை உள்ளிட்ட சில பகுதிகளில் ஊடுறுவும் காட்டு யானைகளினால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களையும் உயிர் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
இது தொடர்பில் மக்கள் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
காட்டுயானைகளின் அட்டகாசத்திலிருந்து மக்களை பாதுகாக்குமாறு அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே அமைச்சர் உடனடியாக மின் வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததுடன் இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் என்றார்.
மேலும்,இதற்காக விசேட குழுவொன்றை நியமிப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளினால் ஏற்பட்ட சேத விபரங்கள்,அது தொடர்பான விபரங்கள் மற்றும் மக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடத்திலிருந்து கோரவுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் இது தொடர்பில் ஆராய விரைவில் தான் மட்டக்களப்புக்கு வருகை தருவதாகவும் குறிப்பிட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago