2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

முறக்கொட்டாஞ்;சேனையில் மனித எச்சங்களைத் தோண்டும் நடவடிக்கை நிறைவு

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, முறக்கொட்டாஞ்சேனையில் இராணுவ முகாமுக்கு அருகில் மனித எச்சங்கள் காணப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட இடத்தைச் சூழ மீண்டும் அகழ்வு செய்யும் வகையில் திங்கட்கிழமை  (20) தொடங்கப்பட்ட நடவடிக்கை, நேற்றுடன் (21)  நிறைவுற்றதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட அகழ்வின்போது, கடந்த ஒக்டோபரில்; கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களைப் போன்ற மேலும் சில எச்சங்கள் மீட்கப்பட்டன.

அத்துடன் துருப்பிடித்த இரும்புக் கம்பிகள், மண் மாதிரி என்பனவும் மீட்கப்பட்டு, பொதி செய்யப்பட்டு மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான எம்.ஐ.எம்.றிஷ்வியின் உத்தரவுக்கமைய ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

முறக்கொட்டாஞ்சேனையில் படையினரால் விடுவிக்கப்பட்ட தனக்குச் சொந்தமான காணியில்  அக்காணி உரிமையாளர் மலசலகூடம்  அமைக்கும் பணியை கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முன்னெடுத்திருந்தார். அதன்போது,  அக்காணியில்  எலும்பு எச்சங்களும், டயர் மற்றும் ரயில் சிலிப்பர் கட்டைகளை எரித்த கரிகளும் காணப்பட்டன.  இதனையடுத்து, மீட்கப்பட்ட எலும்பு எச்சங்களும் அகழப்பட்ட இடமும் சோதிக்கப்பட்டன.

அதன் பின்னர், அக்காணியில் மேலும் அகழ்வு செய்யவும் எச்சங்களைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் உத்தரவிடப்பட்டதுடன், அக்காணியில்; எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என்று அக்காணி உரிமையாளருக்கும் உத்தரவிட்டது. அத்துடன், அக்காணிக்குப் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
தற்போது அப்பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில், அக்காணியில் நிர்மாணப் பணியை ஆரம்பிக்கலாம் எனவும் உரிமையாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X