Suganthini Ratnam / 2017 ஜனவரி 25 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மட்டக்களப்பு நீதவான் நீதமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்தின தேரர்; மற்றும் தமிழரசுக் கட்சியினுடைய இளைஞர் அணியின் உப தலைவர் வி.பூபாலராஜா ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மே 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு நகரில் இன ரீதியான பேச்சுகளை பேசியதாகக் கூறி, அம்பிட்டியே சுமணரத்தின தேரருக்கு எதிராகவும் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகக் கூறி தமிழரசுக் கட்சியினுடைய இளைஞர் அணியின் உப தலைவர் வி.பூபாலராஜாவுக்கு எதிராகவும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதை அடுத்து, இவர்கள் இருவருக்கும் கடந்த டிசெம்பர் 14ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்தது.
இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இவர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, நீதவான் இந்த வழக்கை ஒத்திவைத்தார்.
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025