2025 மே 07, புதன்கிழமை

மட்டக்களப்பில் மீண்டும் மழை

Niroshini   / 2015 நவம்பர் 22 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஓய்ந்திருந்த மழை நேற்று சனிக்கிழமையிலிருந்து மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாச்சோலை,ஆனைகட்டியவெளி பிரதான வீதியினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் ஆனைகட்டியவெளி, சின்னவத்தை,நெடியவட்டை, மாலையர்கட்டு போன்ற கிராமங்களுக்கான போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன.

இக்கிராமத்து மக்கள், மண்டூர் வீதியூடாகவும் வெல்லாவெளி கோணவலை வீதியூடாகவும் மிக நீண்ட தூரம் சென்று தமது போக்குவரத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இவற்றினைவிட, மாவட்டத்திலுள்ள பெரும்பாலான கிராமங்களின் உள்வீதிகளில் வெள்ள நீர் தேங்கிக் காணப்படுவதானால் கிராம மக்களின் போக்குவரத்துக்கள் செய்வதிலும் பலத்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மழை நீர் வடிந்தோடக்கூடிய வடிகான்கள் இன்மையே இவ்வாறு வீதிகளிலும் நீர் தேங்கிக் காணப்படுவதற்குரிய காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X