2025 நவம்பர் 01, சனிக்கிழமை

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Janu   / 2025 செப்டெம்பர் 08 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில் ஆசிரியர் நிரந்தர நியமனம் கோரி பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றி வரும் பட்டதாரிகள் காந்தி பூங்காவின் முன்னால் திங்கட்கிழமை (08) அன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டதாரிகளான அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பாடசாலைகளில் இணைக்க ப்பட்டு கடமையாற்றி வரும் உத்தியோகத்தர்களின் பட்டதாரிகள் ஒன்றியம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்க்கு அழைப்பு விடுத்திருந்தது

இதையடுத்து காந்தி பூங்காவின் முன்னாள் திங்கட்கிழமை (08)  காலை 9. மணிக்கு ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான பட்டதாரிகள்   பல சுலோகங்கள் ஏந்தியவாறு சுமார் ஒரு மணித்தியாலயம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.

கனகராசா சரவணன்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X