Editorial / 2020 மே 11 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு - திஹிலிவெட்டை பிரதேசத்தில், இலுப்படி மும்மாரி குளத்துவெட்டை வாய்க்கால் அருகில் காணப்பட்ட 03 கைக்குண்டுகள், நேற்று (10) மீட்கப்பட்டுள்ளனவென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கைக்குண்டுகளைக் கண்ட விவசாயியொருவர், பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, குண்டுகள் செயலிழக்கப்பட்டன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவை, விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .