Princiya Dixci / 2022 மே 17 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜவ்பர்கான்
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைவடைந்துள்ள நிலையில், டெங்கு பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரப் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு சிரமாதான வேலைத்திட்டம் கிரமமாக முன்னெடுக்கப்படுகின்றன.
இம்மாவட்டத்திலிருந்து கொரோனா மற்றும் டெங்கு தொற்றுக்களைக் கட்டுப்படுத்தும் முகமாக பொதுமக்கள் சுகாதார நடவடிக்கைகளை முழுமையாகப் பின்பற்றுவதற்கும், விசேட வழிப்புனர்வு செயற்றிட்டங்களை மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரன் மேற்கொண்டுள்ளார்.
மாவட்டச் செயலாளரின் பணிப்புரைக்கமைய, பொது இடங்களில் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வாராந்த சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களால் சிரமதான நடவடிக்கை மாவட்டச் செயலக வளாகத்தில் இன்று (17) முன்னெடுக்கப்பட்டது.
கொவிட் 19 சுகாதார வழிமுறைகளை மக்கள் முழுமையாக பின்பற்றி நடப்பதுடன், டெங்கு நுளம்பு பரவலில் இருந்து அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிரிவினரால் தொடர்ந்தும் வலியுறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago