Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
கே.எல்.ரி.யுதாஜித் / 2018 ஜூலை 23 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவால், மாவட்ட செயலகங்கள் தொடர்பான செயற்றிறன் மதிப்பீட்டின்படி, 2016ஆம் நிதி வருடத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் 91 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளது.
அரச திணைக்களங்கள், அமைச்சுகள், மாகாண சபைகள், உள்ளூராட்சி நிறுவனங்கள், மாவட்ட செயலகங்கள் தொடர்பான செயற்றிறன் மதிப்பீடு ஒன்றை, நாடாளுமன்றப் பொதுக் கணக்கு குழு, 2015ஆம் ஆண்டு நிதி வருடத்திலிருந்து மேற்கொண்டு வருகின்றது.
அரசாங்கத்தால், நிதி ஒதுக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள், மக்கள் சார் வாழ்வாதர, உதவிச் செயற்பாடுகள் தொடர்பிலான நிதிகளின் பயன்பாட்டு ரீதியான செயற்றிறன்கள் இந்த மதிப்பீட்டில் முக்கியப்படுத்தப்படுகின்றன.
இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், 2016ஆம் நிதியாண்டுக்கு மாவட்டச் செயலகங்களின் மதிப்பீடுகள், பொதுக்கணக்குக் குழுவால் வெளியிடப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், கம்பஹா மாவட்ட செயலகம் 94 புள்ளிகளையும், மட்டக்களப்பு மாவட்ட செயலகம் 91 புள்ளிகளையும், யாழ்ப்பாண மாவட்ட செயலகம் 90 புள்ளிகளையும், மொனராகலை மாவட்ட செயலகம் 88 புள்ளிகளையும், களுத்துறை 86 புள்ளிகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான, மதிப்பீடுகளுடைய மாவட்ட செயலகங்களில் நிதி நிர்வாக கிளை விடயங்கள் மீது கணக்காய்வு அதிபதி திணைக்களம் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தி, பொதுக்கணக்கு குழுவிற்கு சிபார்சை வழங்குவதன் ஊடாக இப்புள்ளிகள் இடப்படுகின்றன.
இதில், முதல் மூன்று இடங்களையும் பெறுகின்ற மாவட்ட செயலகங்களுக்கான சான்றிதழ்களும் பாராட்டுகளும் பொதுக் கணக்குக் குழுவால் வழங்கப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025