Editorial / 2022 ஜனவரி 19 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கல்வி பயின்றுவரும் இரண்டாம் ஆண்டு ஆசிரிய மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்கு 202 பேருக்கு, நேற்று (18) மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என ஆசிரியர் கலாசாலை அதிபர் எம்.பி.யுனைட் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு விடுமுறையில் சென்ற ஆசிரிய மாணவர்கள் தொடர்ந்து விடுமுறையில் சூம் தொழில்நுட்பம் மூலம் கவ்வி கற்று வந்தனர்.
இந்நிலையில், சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஆசிரியர் கலாச்சாலை நேற்றுத் திறக்கப்பட்டதையடுத்து, அங்கு கல்வி பயின்றுவரும் 202 இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேருக்கும் அம்பாறை மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேர் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026