Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா
2013ஆம் ஆண்டு முதல் இற்றைவரை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 700 பெண்கள் பிரதேச செயலகத்திலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களூடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத் திணைக்களத்தில் பதிவு செய்து வீட்டுப் பணிப்பெண்களாக சென்றுள்ளதாக அப்பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.
வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு செல்லும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் மாற்றுத்தொழில் சம்பந்தமான விழிப்புணர்வுக் கருத்தரங்கு, மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18) நடைபெற்றது.
பெண்கள் வாழ்வாதாரம் தேடி வெளிநாடு நாடு செல்லும்போது வதனால் கணவன், மனைவியின் பரஸ்பர உறவு முக்கியமாக பிள்ளைகளின் கல்வி சீரழிகின்றது. வருடமொன்றில் 150 பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு செல்கின்றனர்.
இருந்தபோதிலும், புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு தொழில்களுக்குச் செல்கின்ற அனைவரும் தங்களின் நோக்கங்களை இலகுவில் அடைய முடிவதில்லை எனவும் அவர் கூறினார்.
தொழில் நிமிர்த்தம் வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கான தகவல்களை தங்களின் பிரதேசத்துக்குட்பட்ட பிரதேச செயலகங்களில் பெறமுடியும். அல்லது மட்டக்களப்பு, கல்முனை ஆகிய இடங்களிலுள்ள மாவட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினூடாக பெறமுடியும். உங்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் முகவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் திணைக்களத்தில் பதிவுசெய்துள்ளதையும் தொழில் விபரங்களையும் பெறுவதன் மூலம் ஏமாற்றங்களை தவிர்க்கலாம் எனவும் அவர் கூறினார்.
மேலும், வாழ்வாதாரத்தை தேடுவதற்காக வெளிநாடுகளுக்கு செல்லாமல் இங்குள்ள சமுர்த்தி போன்ற அரச வாழ்வாதார மேம்பாட்டு உதவிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து பெறும் வாழ்வாதார உதவிகளைக் கொண்டு குடும்பத்தையும் பிள்ளைகளின் கல்வியையும் மேம்படுத்த முயற்சிக்கலாம் எனவும் அவர் கூறினார்.

2 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago