Princiya Dixci / 2021 ஒக்டோபர் 20 , பி.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
பௌர்ணமி தினத்தில் இரு வீடுகளில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட இருவரை, மட்டக்களப்பு, வவுணதீவில் இன்று (20) கைதுசெய்துள்ளதாக, வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.
இவர்களிடமிருந்து 12 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசேட புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவலையடுத்து, சம்பவதினமான இன்று காலை நெடுஞ்சேனை பிரதேசத்தில் வெவ்வேறு இரு வீடுகளை பொலிஸார் முற்றுகையிட்டனர்.
இதன்போது சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 18 வயது இளைஞனை 7 போத்தல்கள் கொண்ட 5,250 மில்லி லீற்றர் மதுபானத்துடன் கைதுசெய்தனர்.
அதேவேளை, 43 வயதுடைய பெண் ஒருவரை 5 போத்தல்கள் கொண்ட 3750 மில்லி லீற்றர் மதுபானத்துடன் கைது செய்துள்ளதாகவும் வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
23 minute ago
26 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
26 minute ago
1 hours ago
1 hours ago