2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மரக்கறி கன்றுகள் விநியோகம்

Princiya Dixci   / 2022 ஜூலை 28 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள உணவுப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில், உப உணவுப் பயிர் உற்பத்தியைப் பெருக்குவதற்காக கலைஞர்களுக்கு மரக்கறிக் கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக ஏறாவூர் நகர விவசாய விரிவாக்கல் பிரிவின் போனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேசத்திலுள்ள கலையாற்றல் மிக்க பல்துறைக் கலைஞர்களுக்கு கத்தரி மற்றும் மிளகாய் கன்றுகளை வழங்கும் நிகழ்வு, ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் நேற்று (27) நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர், கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X