2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மரங்களை நடத் தீர்மானம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

மண்முனை தென்மேற்கு பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், பயன்தரு மரங்களை நட்டு, இயற்கையான அழகுமிக்க சூழலை உருவாக்குவதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் ஆறாவது சபை அமர்வு, சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில்,  இன்று(24) நடைபெற்ற போதே, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த காலங்களில் பிரதேசத்துக்கு உட்பட்ட பல மரங்கள் அழிக்கப்பட்டமையால், காட்டுவிலங்குகளும், மனிதர்களும் இயற்கையின் சீற்றங்களுக்கு ஈடுகொடுத்து வருகின்றனர்.

இயற்கையின் சமநிலையையும் இயற்கையான சூழலையும் ஏற்படுத்தி, மனிதர்களுக்கு பயனையேற்படுத்தும் வகையில், மண்முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வீதியோரங்களிலும், ஆற்றாங்கரை ஓரங்களிலும், பொது இடங்களிலும் நிழல்தரு மரங்களையும் காய், கனி தரும் மரங்களையும் நட்டு பாதுகாப்பதென, சபையின் உறுப்பினர் மு.அருட்செல்வம் முன்வைத்த பிரேரனைக்கு ஆதரவு வழங்கப்பட்டு, பிரதேசத்தில் மரங்கள் நடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மரங்கள் நடுவதன் மூலம் மண்ணரிப்பு மற்றும், வெயிலின் தாக்கம் போன்றவற்றை குறைக்க முடியும் எனவும் இதன்போது கூறப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X