Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2018 ஜூலை 26 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு விழா, மட்டக்களப்பு வெபர் மைதானத்தில், எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளனவென, மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சம்மேளனத்தின் தலைவர் கே. ஜீவராசா தெரிவித்தார்.
இவ்விளையாட்டு விழாவில் பங்குகொண்டு, மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிப்பதன் மூலம், சமூகத்தில் மாற்றுத் திறனாளிகளைப் பற்றி இருந்து வருகின்ற குறை மதிப்பீட்டுக் கண்ணோட்டத்தை மாற்ற முடியும் எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “கடந்த மூன்று ஆண்டுகளாக, மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு விழாவை நடத்தி, அவர்களுக்கு உதவி, ஊக்கங்களை அளித்து வருவதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களிலும், நமது அமைப்பு ஈடுபட்டு வருகின்றது.
“இம்முறை இடம்பெறவுள்ள மாற்றுத் திறனாளிகள் நிகழ்வுகளில், விளையாட்டுப் போட்டி, இசை நிகழ்ச்சிகள் உட்பட இன்னும் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன” என்றும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025