2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிகள், உதவிகளைவழங்க நடவடிக்கை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூலை 25 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவு எதிர்காலத்தில் இம்மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு விசே‪ட பயிற்சிகள்,  உதவிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, மாவட்ட ஊடக தகவல் அதிகாரி எஸ். வடிவேல் ஜீவானந்தன், மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

எனவே, இவ்வாறான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு பிரதேச ஊடகவியலாளர்களின் விவரங்களைப் பெற வேண்டியுள்ளதால், அவற்றை 5 தினங்களுக்குள் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு விசே‪ட பயிற்சிகள்,  உதவிகளைப் பெற்றுக்கொடுக்கக் கூடியதான பணிகளைத் தங்குதடையின்றிச் செய்வதற்கு பிரதேச ஊடகவியலாளர்கள் பற்றிய விவரங்கள் மாவட்ட ஊடகப்பிரிவுக்குத் தேவைப்படுகின்றன.

“எனவே, பிரதேச ஊடகவியலாளர்கள் மாவட்ட ஊடகப்பிரிவுக்கு, அவ்விவரங்களைத் தந்து தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

“மாவட்ட ஊடகப்பிரிவில் தங்களைப் பதிவு செய்து கொள்ளாத ஊடகவியலாளர்களை மாவட்ட ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்படும் விசே‪ட பயிற்சிகள் மற்றும்  உதவிகளைப் பெற்றுக்கொடுக்கும் திட்டத்தில் இணைத்துக் கொள்ள முடியாமல் போகும் என்பதையும் அறியத் தருகின்றேன்”' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X