2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மூன்று மில்லியன் ரூபாய் பெறுமதியான மரங்கள் அழிப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. விஜயரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்டத்தில், கடந்த ஆறு மாதங்களில் மாத்திரம், சுமார் 3 மில்லியன் ரூபாய் பெறுமதியான வனப் பகுதிகள், சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ளனவென, மாவட்ட வன அதிகாரி டபிள்யூ.எம்.எச். விஜயரட்ண தெரிவித்தார்.

அரச வனங்களிலிருந்து சட்டவிரோதமாக மரங்களை வெட்டியமை தொடர்பாக, 45 குற்றங்கள் இக்காலப்பகுதியில் பதிவாகியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு, பெரியபுல்லுமலை, வாழைச்சேனை ஆகிய வன வட்டார அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது, இந்தக் குற்றச் செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், 20 சந்தேகநபர்களைக் கைதுசெய்து, அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர்களுக்கு, நீதிமன்றங்கள் 2 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளன எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X