2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிள் தீக்கிரை

Editorial   / 2019 ஜூன் 15 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, க. விஜயரெத்தினம்

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியில், வெள்ளிக்கிழமை (14) மாலை, மோட்டார் சைக்கிள் ஒன்று, இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

முனைக்காடு மேற்கு பிரதேசத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் தரித்திருந்த மோட்டார் சைக்கிளே, இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது..

குறித்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் யார் என்று இதுவரையில் தெரியவில்லையெனவும் எதற்காக அப்பகுதியில் மோட்டார் சைக்கிள் தரித்து நின்றது என்பது தெரியவில்லையெனவும், அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X