Freelancer / 2023 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
கரடியனாறு - மரப்பாலம், புத்தம்புரிக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டகப்பட்ட சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மயிலவெட்டுவானை சேர்ந்த 42 வயதுடைய இராசமன்னன் தேவராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த நபர் நேற்று இரவு களத்தில் மீன்படிக்கச் சென்றவர் காலையில் வீடு திரும்பாத நிலையில், அவரை உறவினர்கள் தேடிச் சென்ற நிலையில் குளத்துக்கு அருகாமையில் யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தனர்.
இதனையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். R
7 hours ago
03 Feb 2026
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
03 Feb 2026
03 Feb 2026