Gavitha / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு பாசிக்குடா வீதியில் அண்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளமையை தடுக்கும் முகமாக, கல்குடா பொலிஸார், பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு பயிற்சி நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக, நேற்று சனிக்கிழமை (03) வாழைச்சேனை பாசிக்குடா வீதியில், மாணவர்கள் எவ்வாறு போக்குவரத்து விதிமுறைகளை மேற்கொள்வது தொடர்பாக பயிற்சியும் விளக்கமும் வழங்கப்பட்டது.
மஞ்சள் கடவை மூலம் வீதியை கடப்பது தொடர்பாக விதி முறைகளை பின்பற்றுவது, ஒழங்கற்ற முறையில் வீதியை கடப்பதால் ஏற்படும் விபத்துக்களால் ஏற்படும் பின் விளைவுகள், தலைக் கவசம் அணிதல், மோட்டார் சைக்கிளில் மற்றும் துவிச்சக்கரவண்டிகளில் பயணங்களை எவ்வாறு பாதுகாப்பாக மேற்கொள்ளல் போன்ற பல விளக்கங்களை செய்கை முறை மூலம் மாணவர்களையும் உள்வாங்கி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இது தொடர்பான பயிற்சிகள், வாரத்தில் ஒரு தடவை மாணவர்கள் மத்தியில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

7 hours ago
7 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
20 Dec 2025