Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 17 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு நகரில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியின்; நடுவில் அமைக்கப்பட்டுள்ள வீதி பிரிப்பு தடுப்பில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த நிலையில் குறித்த இளைஞன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிந்தவர் பாலமீன்மடு பிரதேசத்தினை சேர்ந்த 19வயதுடைய சுரேஸ் சஜீந்த் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அதிக வேகமே விபத்துக்கு காரணம் என மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago