2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் பூசகர் பலி

Niroshini   / 2017 மார்ச் 02 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு-கல்முனை பழைய கல்முனை வீதி, கல்லடியில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில், பூசகர் ஒருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பீ.வெதகெதர தெரிவித்தார்.

கல்லடி, பேச்சியம்மன் கோயிலில் பூசகராக பணியாற்றிவந்த ஆறுமுகன் வடிவேல் (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கல்முனையிலிருந்து  மட்டக்களப்பு நோக்கிச் சென்ற கே.டி.எச்.ரக வான், குறித்த நபரை மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X