Suganthini Ratnam / 2017 மே 01 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சாதகமான முடிவைப்; பெற்றுத்தருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வாக்குறுதியளித்துள்ளார்.
மேற்படி வேலையற்ற பட்டதாரிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு, அமெரிக்கன்மிஷன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாலை நடைபெற்றுள்ளது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவித்த வேலையற்ற பட்டதாரிகள்,'எங்களின் போராட்டம் ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமையுடன் (30) 69ஆவது நாளை எட்டியுள்ளது என்பது தொடர்பிலும்; எங்களுடைய தொழில் உரிமையின் தேவைப்பாடு சம்பந்தமாகவும் தெளிவுபடுத்தினோம்.
அதற்குப் பதிலளித்த அவர், இரண்டு வாரங்களுக்குள் சாதகமான முடிவைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்துள்ளார். ஆகவே, எதிர்க்கட்சித் தலைவரின் வாக்குறுதி எமக்குச் சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நாம் இருக்கின்றோம்.
மேலும் எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பின்போது, எங்களின் பிரச்சினைகள் ஆக்கபூர்வமான முறையில் அவர்களிடம் எடுத்துச் செல்லப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது' என்றனர்.
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago