Princiya Dixci / 2017 ஏப்ரல் 22 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்
அதிகரித்த வெப்பநிலையால் சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் விலங்குகள் பாரிய அசௌகரியத்துக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டள்ளது.
தற்போது நிலவும் வெப்பநிலையைத் தணிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில், மக்கள் அதிகளவில் வெள்ளரிப் பழத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மட்டக்களப்பு, பார் வீதியில் இன்று (22) இதனைக் காணக்கூடியதாக இருந்தது.
மட்டக்களப்பில் இன்று சனிக்கிழமை 33.5 பாகை செல்சியல் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பாளர் எம். சூரியகுமாரன் தெரிவித்தார்.
வியாபாரிகள், ஒரு கிலோகிராம் நிறையுடைய வெள்ளரிப்பழத்தை 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.
வெள்ளரிப்பழத்ததின் அறுவடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிலிலுள்ள கிரான்குளம், புதுக்குடியிருப்பு மற்றும் தாளங்குடா அகிய பிரதேசங்களில் அதிகளவாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்த வெப்ப நிலையினால் தோல் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவும் அபாய நிலை காணப்படுவதால் நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டுமென, சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago