Niroshini / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
“தமிழர்களுக்கு கிடைக்கின்ற தீர்வு பொறிமுறையில் முஸ்லிம்களுக்கும் மத்திய அரசாங்கத்தின் கீழ் கிடைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு வேறுபட்ட கருத்தும் இல்லை. அதேவேளை, முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இருக்கும் பிரச்சினைகளையும் நாங்கள் இருசாராரும் சேர்ந்து பேசி தீர்த்துக் கொள்ளக் கூடிய பொறிமுறையை ஏற்படுத்தவேண்டும்” என, வட மாகாண முதல் அமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும், வட - கிழக்கு இணைப்பு தொடர்பாக கிழக்கு மாகாண முதல் அமைச்சர் முன்வந்தால் அவருடன் பேசத் தயார் எனவும் தெரிவித்தனர்.
தமிழ் மக்கள் பேரவைக்கும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று மட்டக்களப்பு தாண்டவன் வெளியில் உள்ள கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
வட - கிழக்கு இணைப்பு சம்பந்தமாக முஸ்லிம் மக்கள் தொடர்பாக இருக்கும் கரிசணைப் பற்றி அவர்கள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பாக எந்தந்த அடிப்படையிலே அனுகவேண்டும் என்பது தொடர்பாக பேசியுள்ளோம். அதே நேரத்தில் எங்களைப் பிரித்திருந்த சிறு சிறு விடயங்கள் ஆராயப்பட்டன. அவை அது தொடர்பாக புரிந்துணர்வுகளை ஆதங்கங்களை வெளிப்படுத்தி ஒரு சுமூகமான ஒரு பேச்ச வார்த்தை தற்போது நடைபெற்றிருக்கின்றது
ஆனால், முஸ்லிம் மக்கள் எதனை வேண்டுகின்றார்கள் என்ற எண்ணப்பாடுகளை அவர்கள் தான் அதனை வெளிப்படுத்தவேண்டும் என்ற அடிப்படையில் அதனை அடுத்த கூட்டத்தலே வெளிப்படுத்தும் முகமாக ஆவண ரீதியாக தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர். ஆகவே, இதனை வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் நடக்கின்ற பேச்சுவார்த்தைக்கு, அரசாங்கம் அதற்கு இடமளிக்குமா அல்லது சிங்கள மக்கள் அதற்கு இடையூறாக இருப்பார்களா அரசியல் காரணங்களுக்காக இடையூறாக இருக்கமுடியுமா என கூற முடியாது.
கேப்பாப்புலவு மக்களுக்காக குரல் கொடுக்க தயார் என ஒரு சிங்கள அமைப்பு தெரிவித்திருக்கின்றது. அது நல்லதொரு விடயம். சிங்கள மக்களும் எங்களுடைய பிரச்சினைகளை தெரிந்து வைத்திருக்கின்றார்கள். ஆகவே, அனைவரும் சேர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டிய காலகட்டம் வந்திருக்கின்றது” என்றார்.
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago