கே.எல்.ரி.யுதாஜித் / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் வருமானம் குறைந்த மக்களை வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை உத்தியோகத்தர்கள் விரிவுபடுத்தவேண்டும் என, சமுர்த்தி பணிப்பாளர் குணரட்ணம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று 18ஆம் திகதி நடைபெற்ற பிரதேச சமுர்த்தி அலுவலகங்களின் ஊடகப் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான கூட்டத்தில் கருத்தத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பி.குணரட்ணம்,
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், அரசியல் உள்ளிட்ட சகல துறைகளிலும் வலுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு எமது திணைக்களத்தினால் இணைக்கப்பட்டுள்ள தொடர்பியலாளர்கள் செயற்படவேண்டும்.
சமுர்த்தி நிவாரணம் என்பது வறுமையான, வருமானம் மிகக் குறைந்த மக்களுக்கானது என்பதை வருமானம் அதிகரிக்கப்பட்ட மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டியது மிக அவசியம் இவ் விடயத்தினை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு பிரதேச செயலகங்களிலுள்ள சமுர்த்தி முகாமையாளர்களுக்கும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும், திணைக்கள ஊடக உத்தியோகத்தர்களுக்கும் உள்ளது.
அரசினால் வழங்கப்படும் நிவாரணங்கள் எதுவானாலும் அது உரிய தகுதியான மக்களுக்கு சென்றடையவேண்டும். இந்த விடயம் தொடர்பில் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மிக தெளிவாக இருக்க வேண்டும். என தெரிவித்தார்.
35 minute ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
6 hours ago
9 hours ago