2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வறுமையில் வாடும் 9 குடும்பங்களுக்கு வீடுகள்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள ஒன்பது குடும்பங்களுக்கு வீடுகள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.அமலநாதன் தெரிவித்தார்.

செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவில் நான்கு வீடுகளும் ஓட்டமாவடிப் பிரதேச செயலாளர்; பிரிவில் இரண்டு வீடுகளும் காத்தான்குடி, கிரான், வவுணதீவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒவ்வொரு வீடும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஓமான் நாட்டின் நிதியுதவியுடன் ஒவ்வொரு வீடும் 500,000 ரூபாய் பெறுமதியில் சமையல் அறை, படுக்கை அறை, வரவேற்பு அறை ஆகியவற்றைக் கொண்டதாக கட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு இலங்கை பூராகவும் 105 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

காத்தான்குடிப் பிரசேதச செயலாளர் பிரிவில் இவ்வாறு கட்டப்பட்ட வீடொன்று ஞாயிற்றுக்கிழமை (07) மாலை திறந்துவைக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X