Suganthini Ratnam / 2017 ஜனவரி 24 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான வலம்புரிச் சங்கு ஒன்றை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டின் பேரில் 7 பேரை மட்டக்களப்பு, கல்குடாவில் திங்கட்கிழமை (23) மாலை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
இது தொடர்பில் கிடைத்த தகவலை அடுத்து, குறித்த இடத்துக்கு விசேட அதிரடிப் படையினர் சென்று தேடுதல் நடத்தினர்.
இதன்போது, கல்குடா விஷ்;ணு கோவில் வீதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அச்சங்கையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
மாத்தளை, வாழைச்சேனை, பொலன்னறுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஒன்றரை அடி நீளமான இந்தச் சங்கு மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டதாக மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களப் பொறுப்பதிகாரி என்.சுரேஸ்குமார் தெரிவித்தார்.
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025